கரூர், நவ. 12: கரூர் பேருந்து நிலைய பகுதியில் இருந்து கரூர் மாநகரின் உட்புற பகுதிகளுக்கு கூடுதலாக ஷேர் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பயணிகள் கோரிக்கைவைத்துள்ளனர். கரூர் மாநகராட்சியில் காந்திகிராமம், பசுபதிபாளையம், வேலுசாமிபுரம், வெங்கமேடு, தாந்தோணிமலை போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் தினமும் கரூர் நகரப்பகுதிகளை ஒட்டியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு பணியாற்ற வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிக்க நகரப் பேருந்துகளையே பெரும்பாலும் நம்பிபி உள்ளனர். கரூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து அதிகளவு தாந்தோணிமலை பகுதிகளுக்குத்தான் அதிகளவு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு குறைவான அளவில்தான் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, கரூரில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும்.
நகரப் பேருந்துகள் மற்றும் மினி பஸ்களில் மக்கள் பயணம் செய்து வரும் நிலையில், மக்கள் நலன் கருதி கூடுதலாக ஷேர் ஆட்டோக்கள் இயக்கினால் தொழிலாளர்களுக்கு எளிதாக இருக்கும் என கூறப்படுவதால் அதிகாரிகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.