கரூர், ஆக. 12: மகா அபிஷேக குழு சார்பில் 26ம் ஆண்டு ஆடி தெய்வ த்திருமண விழாவினை முன்னிட்டு நேற்று காலை தெய்வத் திருமண விழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும், கரூவூர் மகா அபிஷேக குழு சார்பில் ஆடி தெய்வ திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விழா ஆகஸ்ட் 11ம்தேதி காலை 10. 45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் கல்யாண பசுபதீஸ்வரா சுவாமிக்கும், ஆனிலை அலங்காரவள்ளி, சவுந்திரநாயகி ஆகியோருக்கும் தெய்வ திருமண விழா நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 1ம்தேதி காலை 11 மணியளவில், கரூர் பசுபதீஸ்வரா கோயில் முன்பு முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.இந்த விழாவை தொடர்ந்து, நேற்று காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் கோயில் நால்வர் அரங்கில், பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், ஆனிலை அலங்காரவள்ளி, ஆனிலை சவுந்திரநாயகி ஆகியோர்களுக்கும் தெய்வத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அபிஷேக குழுவினர் செய்திருந்தனர்.