கரூர், மே 30: கரூர் திருச்சி பைபாஸ் சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தம் காரணமாக இரவு நேரங்களில் அவ்வப்போது வாகன விபத்து நடைபெற்று வருவது குறித்து கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் திருச்சி பைபாஸ் சாலையில், பெட்டவாய்த்தலை வரை சாலை குறுகலாவும், மாயனு£ரில் இருந்து இருந்து கரூர் சுக்காலியூர் வரை சாலைப் பகுதி விரிவாகவும் உள்ளது. மேலும், மாயனு£ர் முதல் கரூர் சுக்காலியூர் வரை சாலையின் இருபுறமும் தடுப்பு அமைக்கப்பட்டு இரண்டு வழிகளில் போக்குவரத்து நடைபெற்று
வருகிறது.
இந்த பகுதிச் சாலையின் வழியாக பேரூந்து உட்பட கனரக வாகனங்களின் போக்குவரத்தும் அதிகளவு உள்ளது. இதுபோன்றவர்களை குறி வைத்து திருச்சி கரூர் சாலையில் சுக்காலியூர், வெங்ககல்பட்டி மேம்பாலம், உப்பிடமங்கலம் பிரிவு, வீரராக்கியம் பிரிவு, மாயனு£ர் போன்ற பகுதிகளில் சாலையோரம் ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது.நீண்ட து£ரம் பயணிக்கும் கனகர வாகன ஓட்டிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு ஒய்வெடுக்கின்றனர்.
இந்நிலையில், இதன் காரணமாக இரவு நேரங்களில் அவ்வப்போது விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் சாலையோரம் கனரக வாகன நிறுத்தம் குறித்து கண்காணித்து அதனை முறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்துவதோடு, மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நிறுத்த அறிவுரை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.