வேலாயுதம்பாளையம், ஆக.30: கரூர்- திண்டுக்கல் சாலை வெங்கக்கல்பட்டி முதல் தாந்தோணிமலை வரை நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணியை உதவி கோட்டப்பொறியாளர் ஆய்வு செய்தார்.
கரூர் -நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டதிற்கு உட்பட்ட திண்டுக்கல் -குஜிலிம்பாறை -கரூர் சாலை வெங்கக்கல்பட்டி முதல் தாந்தோணிமலை வரை நடைபெற்று வரும் வடிகால் பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் தன்மை குறித்தும், சரியான விகிதாச்சாரத்தில் கான்கிரீட் கலவை, தரமான பேவர் பிளாக் வைத்து பணிகள் நடைபெறுகிறதா என்பதை குறித்து கரூர் உதவிக் கோட்டப்பொறியாளர் தமிழ்ச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது உதவிப்பொறியாளர் கர்ணன் உடன் சென்றார்.