கரூர், மார்ச் 11: கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் இருந்து திருக்காம்புலியூர் வரை கோவை சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் மருத்துவமனைகள் போன்றவை உள்ளன. இந்த சாலையில் வையாபுரி நகர்இ 80 அடி ரோடு போன்ற பல்வேறு பகுதிகளுக்கான கட்ரோடுகள் பிரிகிறது. இந்த கட்ரோடுகளின் வழியாகவும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.
பிரதான கோவை சாலையில் செல்லும் வாகனங்கள்இ கட்ரோடுகளில் பிரிந்து செல்வதற்காக சாலையை கடக்கும் போதுஇ சில சமயங்களில் விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு வாகன ஓட்டிகளின் கவனக் குறைவு ஒரு காரணமாக இருந்தாலும் பிரிவு ரோடுகளில் டிராபிக் போலீசார் பணியில் இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கட்ரோடுகளில் வாகனங்கள் பிரிந்து செல்லும் வகையில் டிராபிக் போலீசார்களை பணியில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.