கிருஷ்ணராயபுரம், ஆக. 18: கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கொல்கத்தாவில் மரு த்துவ பயிற்சி பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்துகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் (கோவக்குளம்) டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் செய்தனர்.போராட்டத்தில் டாக்டர் அருண் பிரசாத் தலைமை வகித்தார். டாக்டர்கள் நித்தியா, ஜெனடிக் ஷிபா, மாநில அரசு ஊழியர் சங்க துணைத் தலைவர். செல்வராணி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பாலியல் வன்கொடைமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்,டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அரசு வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.