கரூர், ஜூன் 11: கரூர் ஒன்றிய பகுதியில் ரூ. 3.67 கோடி மதிப்பீட்டில் நிறைவுபெற்ற பணிகள், புதிய திட்டப் பணிகள் மாவட்ட கழகச் செயலாளர் வி.செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., தொடங்கிவைத்தார். கரூர் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கரூர் ஒன்றிய பகுதியில் ரூ.3.67 மதிப்பில் மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு திட்ட அதிகாரி லேகா தமிழ்ச்செல்வன், கரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.முத்துக்குமாரசாமி, மேயர் கவிதா கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ சிவகாமசுந்தரி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கருணாநிதி, மாவட்ட கழகச் செயலாளர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 3.67 கோடி மதிப்பீட்டில் 27 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். மேலும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
கூறியதாவது’ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்து, அதற்கென நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் சார்பாகவும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் சார்பாகவும், கனிமநிதியின் சார்பாகவும், மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள். கழிவுநீர் வடிகால் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் கரூர் ஊராட்சி ஒன்றியம், காதப்பாறை ஊராட்சியில் வாங்கப்பாளையம் முதல் கரூர் வாங்கல் ரோடு வழி அருகம்பாளையம் வரை ரூ.52.35 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணியினையும், குப்புச்சிபாளையம் மயானத்திற்கு ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், சின்னவடுகபட்டி சாலை ரூ.19.05 லட்சம் மதிப்பீட்டிலும், பெரிச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் முதல் கவுண்டன் ரோடு இணைப்பு வரை ரூ.17.55 லட்சம் மதிப்பீட்டிலும்,
குப்புச்சிபாளையம் முதல் கவுண்டாயூர் வரை ரூ. 24.07 லட்சம் மதிப்பீட்டிலும், காமராஜர் நகர் பகுதியில் ரூ. 12.23 இலட்சம் மதிப்பீட்டிலும், சின்னவடுகபட்டி கிழக்கு பகுதியில் ரூ.14.12 லட்சம் மதிப்பீட்டிலும், NH7 முதல் பேங்க் காலனி வரை ரூ. 11.28 லட்சம் மதிப்பீட்டிலும், முத்து நகர் முதல் பிரேம் நகர் ரூ.4.25 லட்சம் மதிப்பீட்டிலும் சாலை மேம்பாடு செய்தல் பணியினையும், நேதாஜி நகரில் ரூ.17.00 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் அமைக்கும் பணியினையும், அருகம்பாளையம் செம்மலர் நகர் வரை ரூ. 12.93 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணியினையும். நெரூர் வடக்கு ஊராட்சியில், காட்டுபிள்ளையார் கோவில் அருகில் ரூ. 8.00 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியினையும், நெரூர் தெற்கு ஊராட்சியில், புதுப்பாளையத்தில் உள்ள வாய்க்காலில் ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் மற்றும் மதகு அமைக்கும் பணியினையும்.
புதுப்பாளையம் காவிரி ஆற்றின் அருகில் உள்ள மயானத்திற்கு ரூ. 10.00 லட்சம் மதிப்பீட்டில் மயான கொட்டகை, சுற்றுச்சுவர் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், புதுப்பாளையம் மெயின் ரோடு முதல் வாய்க்கால்மேடு வரை ரூ. 8.00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், அரங்கநாதன்பேட்டை வாய்க்காலில் ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் மற்றும் மதகு அமைக்கும் பணியினையும், வேடிச்சிபாளையம் கிழக்கு வாய்க்காலில் ரூ.15.00 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் படித்துறை அமைக்கும் பணியினையும், ஒத்தையூர் பெரியதோட்டத்தில் ரூ. 17.00 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல் பணியினையும், நெரூர் தெற்கு ஊராட்சியில்,
புதுப்பாளையத்தில் உள்ள வாய்க்காலில் ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் மற்றும் மதகு அமைக்கும் பணியினையும், புதுப்பாளையம் காவிரி ஆற்றின் அருகில் உள்ள மயானத்திற்கு ரூ. 10.00 இலட்சம் மதிப்பீட்டில் மயான கொட்டகை, சுற்றுச்சுவர் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், புதுப்பாளையம் மெயின் ரோடு முதல் வாய்க்கால்மேடு வரை ரூ. 8.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், அரங்கநாதன்பேட்டை வாய்க்காலில் ரூ. 3.80 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் மற்றும் மதகு அமைக்கும் பணியினையும். வேடிச்சிபாளையம் கிழக்கு வாய்க்காலில் ரூ. 15.00 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் படித்துறை அமைக்கும் பணியினையும், ஒத்தையூர் பெரியதோட்டத்தில் ரூ. 17.00 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்தல் பணியினையும், சோமூர் ஊராட்சி திருமுக்கூடலூர் ஈஸ்வரன் கோயில் வரை ரூ. 7.17 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை, சோமூர் அண்ணா சிலை பகுதியில் ரூ.9.28 லட்சம் மதிப்பீட்டிலும்,
வேடிச்சிப்பாளையம் வழி கல்லுப்பாளையம் எழுத்துப்பாறை வரை ரூ.21.06 லட்சம் மதிப்பீட்டிலும், சோமூர் செல்லாண்டியம்மன் சாலை ரூ. 17.65 லட்சம் மதிப்பீட்டிலும், சோமூர் மெயின் சாலை முதல் செல்லாண்டியம்மன் கோயில் வரை வழி ரூ. 11.08 லட்சம் மதிப்பீட்டிலும், சோமூர் மெயின் சாலை முதல் சோமேஸ்வரர் ஈஸ்வரன் கோயில் வரை ரூ.9.30 இலட்சமத்தில் சாலை மேம்பாடு செய்தல் பணி தொடங்கி வைக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், காதப்பாறை ஊராட்சியில், சேரன் பள்ளி எதிரில் ரூ. 8.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்ட பணியினையும், சோமூர் ஊராட்சியில், செல்லாண்டிபாளையம் பகுதியில் ரூ. 12.00 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயகூடம் அமைக்கப்பட்ட பணியினையும் திறந்து வைக்கப்பட்டது. ஆகமொத்தம் 25 புதிய பணிகளை தொடங்கிவைத்து 2 முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.3.67 கோடி என தெரிவித்தார். இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பிரபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், கரூர் ஒன்றிய ஆணையர்கள் செல்வி விஜயலட்சுமி, மண்மங்கலம் வட்டாட்சியர் மோகன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கவேல், கதிர்காமம், அவைத்தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.