கரூர், மார்ச் 10: கரூர் தாந்தோணிமலை அருகே சிறுநீரக கல் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம்(81). இவர், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கல் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்ததோடு, பல்வேறு பகுதிகளிலும் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த மனநிலையில் இருந்து வந்த முதியவர், கடந்த 8ம்தேதி அன்று வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.