அரவக்குறிச்சி, ஆக. 21: அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.கோடை காலம் முடிந்தாலும், இம்மாத ஆரம்பத்திலிருந்தே அனல் காற்றுடன் வெயில் அதிகபட்ச மாக வாட்டி வதைத்ததால் மக்களின் இயல்பு வாழ்கை பாதித்தது. கடந்த 3 நாட்களாக மித மழை பெய்த நிலையில், நேற்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.
சென்ற மாதத்திலிருந்து கடும் வெயிலால் ஏற்பட்ட வறட்சி காரணமாக நீர் மட்டம் குறைந்துள்ள வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள், விவசாயக் கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அரவக்குறிச்சி மற்றும் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் மாலையானால் 2 மணி நேரத்திற்கும் மோலாக கன மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் நேற்றும் வாணம் மேக மூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது. மாலை திடீரென்று லேசான மழை பெய்யத் துவங்கி பின்னர் கன மழையாக மாறியது. இரண்டு மணி நேரம் பெய்த கன மழையில் சாலையில் மழை நீர் ஆறு போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கியது. கன மழையினால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக இப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவியது.
அரவக்குறிச்சி ஒன்றியத்தின் 20 ஊராட்சி பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது. இதனால் வறட்சி காரணமாக நீர் மட்டம் குறைந்த விவசாயக் கிணறுகள், வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்கை பாதித்தாலும், ஒரு வாரமாக அடித்த வெயிலிருந்து பொது மக்கள் தப்பித்துள்ளனர். இதானால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.