கரூர்: கரூர் அரசு கலைக் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞருக்கான வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. கருர் தாந்தோணிமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அனைத்து துறைகளிலும் ஆய்வியல் நிறைஞருக்கான வாய்மொழி தேர்வு நடைபெற்றது. இதில், பொருளியல் துறையை சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாய்மொழி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு திருச்சி தந்தை பெரியார் கல்லூரி இணைப் பேராசிரியர் சண்முகம் புறத்தேர்வாளராக கலந்து கொண்டார். மேலும், ஆய்வு வழிகாட்டி செந்தில்குமார், துறைத்தலைவர் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.