குளித்தலை, செப். 4: கரூர் மாவட்ட தடகளசங்கம் சார்பில் புலியூர் தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது. புளியூரில் நடந்த போட்டியில் 16 வயது பிரிவு 600 மீட்டர் ஓட்டத்தில் குளித்தலை மாணவி இனியவள் பங்கு பெற்று இரண்டாம் இடம் பெற்றார். இவர், மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 14 வயது பிரிவு 600மீ ஓட்டபந்தயத்தில் குளித்தலை மாணவி தீக்க்ஷிகா முதல் இடம் பெற்று மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
12 வயது பிரிவு நீளம் தாண்டுதலில் குளித்தலை மாணவி ராம் இனியன் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அதேபோல், 12 வயது பிரிவு பந்து எறிதலில் மாணவன் ரகுலன் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். 10 வயது பிரிவு 60மீ ஓட்ட பந்தயத்திலும்,10 வயது பிரிவு பந்து எறிதலில்போட்டியில் புதுப்பாளையம் மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பற்ற மாணவிகளும் மற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளும் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போதே எம்எல்ஏ மாணிக்கம் நினைவு பரிசு வழங்கி மாணவிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பாராட்டினார்.