கரூர், செப்.2: கரூர் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மார்னிங் ஸ்டார் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பு புரொஜெக்டர் ஜோதிமணி எம்பி வழங்கினார். கரூர் அரிமா சங்கத்தின் கீழ் செயல்படும் மார்னிங் ஸ்டார் உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் ஸ்மார்ட் வகுப்பு நிகழ்ச்சி பள்ளி தாளாளர் அருண் கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு, பள்ளிச் செயலாளர் கந்தசாமி, மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கோகலை ,தலைமையாசிரியர் சித்ரா ஆகியோர் முன்னிலை வைத்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாணவ மாணவியர் பயன்பெறு வகையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் ப்ரொஜெக்டர் வழங்கி சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து மாணவ மாணவியரிடம் கல்வி முறை பற்றி கலந்துரையாடினார். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.