கரூர், ஆக. 11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர செயலாளர் முத்து, புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு திறக்க வேண்டும். விவசாய நிலத்தை அழிக்கும் என்எல்சி நிறுவனத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர்கள் முருகன் சுப்பையா, ரெங்கநாதன், தொண்டரணி துணைச் செயலாளர் சாகுல் அமீது, கரூர் நகர நிர்வாகி சிவகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.