Wednesday, February 21, 2024
Home » கரூரில் குறைதீர்நாள் கூட்டம் மக்களிடம் இருந்து 557 மனுக்கள் பெறப்பட்டது

கரூரில் குறைதீர்நாள் கூட்டம் மக்களிடம் இருந்து 557 மனுக்கள் பெறப்பட்டது

by Ranjith

 

கரூர், ஜன. 9: கருர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 557 மனுக்கள் பெறப்பட்டது. நேற்று கருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், ஒய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 557 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 48 மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும்,

பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில், கூடுதல் திட்ட இயக்குநர் உமாசங்கர், நேர்முக உதவியாளர் சிவராமகிருஷணராஜ்,, நேர்முக உதவியாளர் (நிலம்) கருணாநிதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அன்புமணி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

thirteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi