கரூர் ஜூலை10: கரூர் அறிவுத்திருக்கோயில்,யோகா மற்றும் ஆன்மீக கல்வி மையம், கரூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் அறிவுத் திருக்கோவில் மைய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார், ஆலோசனை குழு தலைவர் அன்பொளி காளியப்பன், சங்கச் செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது வரும் (16ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை கரூர் கோவை ரோடு கொங்கு திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை மெகா காயகல்ப பயிற்சி நடைபெறுகிறது.
காயகல்ப பயிற்சி பெற்றால் நீண்ட நாட்கள் இளமையுடன் ஆரோக்கியத்துடன் வாழ முடியும், ஆற்றல் அதிகரிக்கும் படிப்பில் கவனம் மேலோங்கும், வேலை பார்க்கும் துறையில் ஆர்வம் அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், வியாதிகள் படிப்படியாக குறையும் எனவே இந்த அரிய வாய்ப்பில் மக்கள் கலந்து கொண்டு தங்கள் வருகையை முன்பதிவுசெய்துபயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பயிற்சியில் பேராசிரியர்கள் சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.