பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 12: பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, கரும்பு விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் வஞ்சி தலைமை வகித்தார். பொன்னுசாமி, மனோகரன், பழனி, தீர்த்தகிரி, மாசிலாமணி, செல்வம், சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட செயலாளர் சோலை ராஜசேகர், ராஜகுமாரன், சத்யராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கரும்பு உற்பத்தி செலவு 2 மடங்கு அதிகரிப்பு, நோய் தாக்குதல், வறட்சி, புயல் வெள்ளம், வன விலங்குகள் பாதிப்புகளால் மகசூல் இழப்பு ஏற்பட்டுகி, சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.
எனவே, கரும்பு விவசாயத்தையும், சர்க்கரை உற்பத்தி தொழிலையும் பாதுகாக்கும் பொருட்டு ஒன்றிய அரசும், மாநில அரசும், மாநில வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து, ஆண்டுதோறும் மாநில அரசின் பரிந்துரை விலையினை அறிவிக்க வேண்டும். கரும்புக்கான ஊக்கத்தொகை டன்னுக்கு ₹1000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கரும்பிலிருந்து கிடைக்கும் உப பொருட்கள் லாபத்தில் பாதியை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.