சிவகிரி, பிப்.26: சிவகிரியில் உள்ள கரும்பு ஆலையில் 32 கிலோ புகையிலைப் பொருட்களை பதுக்கியவரை போலீசார் கைதுசெய்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரி, வடக்குத்தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் மணிவண்ணன். இவர் அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான கரும்பு ஆலையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கிவைத்து விற்று வருவதாக போலீசுக்கு ரகசிய ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்மணி உத்தரவின் பேரில் அங்கு சென்ற எஸ்ஐ வரதராஜன் மற்றும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 33 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 40 ஆயிரமாகும். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து மணிவண்ணனை கைதுசெய்தனர். பின்னர் சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின்பேரில் மணிவண்ணனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
கரும்பு ஆலையில் 32 கிலோ புகையிலை பதுக்கியவர் கைது
0
previous post