சோமனூர்,ஆக.29:சோமனூர் கருமத்தம்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமான கஞ்சா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சோதனை நடத்தினர்.
கருமத்தம்பட்டி அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்(32) என்பவர் திருச்சி பகுதியில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி கருமத்தம்பட்டி பகுதியில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.