தர்மபுரி, அக்.17: தர்மபுரியில் இன்று நடைபெறுவதாக இருந்த, கருப்பு கிரானைட் குவாரிகளுக்கான ஏலம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள தகுதி வாய்ந்த கருப்பு கிரானைட் குவாரிகளுக்கு, குவாரி குத்தகை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்று, இன்று (17ம் தேதி) பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இன்று நடைபெற இருந்த பொது ஏலம், மறு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது. ஏலம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.