எப்படிச் செய்வது : முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சுமார் 3 மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து அரைத்து பின் ஒன்றாக கலக்கவும். பின் இரவு முழுவதும் அல்லது 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த கருப்பட்டியை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். கரைத்த நீரை லேசாக கொதிக்க வைத்து ஆற வைக்கவும். பின் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து தோசை மாவில் போட்டு நன்கு கலக்கவும். தோசைக்கல் சூடானதும் மாவை கனமாக வார்த்து, பொடித்த வேர்க்கடலையை தோசை மீது மூடி மூடவும். அடுப்பை மிதமாக வைத்து, வேக விட்டு எடுக்கவும். ரத்த ஓட்டத்தை சீராக்கும் கருப்பட்டி தோசை ரெடி.
கருப்பட்டி தோசை
previous post