செய்முறை தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் ஆறவிடவும். ஆறிய பின் 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும். ஒரு வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறவும். பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.