நிலக்கோட்டை, ஆக. 3: நிலக்கோட்டையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. வைகை பாதுகாப்பு குழு நிறுவன இயக்குனர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட தேசிய பசுமை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் முன்னிலை வகித்தார். பொறுப்பாளர் சாரதா வரவேற்றார். இதில் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதற்கான காரணங்களான தொழிற்சாலை, ரசாயனமம், கதிரியக்கம், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கருத்தரங்கம்
previous post