திருச்செங்கோடு, ஜூன் 4: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி 102வது பிறந்த நாள் விழா, திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் மேற்கு நகர திமுக பொறுப்பாளர் நடேசன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கிழக்கு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தனியார் மருத்துவமனையில், பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி துவக்கி வைத்தார். மருத்துவமனை தலைமை மருத்துவர் ரித்திஷ் தலைமையில் டாக்டர்கள் சதீஷ்குமார், தீபா சங்கரி, மகேஸ்வரன், கதிர்வேல், சபரீஷ், சந்தீப் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
கருணாநிதி பிறந்த நாள் விழா
0
previous post