ஒரத்தநாடு, ஜூன் 27: ஒரத்தநாட்டில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் துப்புரவு பணியாளர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரத்தநாடு நகர திமுக சார்பாக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டின் பேரில் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவாக அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ எம். ராமச்சந்திரன், திருவோணம் முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி மற்றும் ஒரத்தநாடு நகரக் கழக பொறுப்பாளர்கள், மகளிரணி பொறுப்பாளர்கள், இளைஞரணி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.