ஓசூர், ஆக.7: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் மொழியை செம்மொழியாக்கி தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் பாதுகாப்பு அரணாக இருந்த கலைஞர், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 13 முறை வெற்றியை கண்டு 5 முறை 20 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராக இருந்தார். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அரசியல் களத்திலும், சட்டமன்ற ஜனநாயகத்திலும், மகத்தான சாதனைகள் படைத்த பன்முக ஆற்றலை தன்னகத்தை பெற்றிருந்த முத்தமிழர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. மாவட்ட அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதையடுத்து மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி, வார்டு, ஊராட்சி, கிளை மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலைஞரின் உருவப்படத்தை நிறுவி, அஞ்சலி செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
previous post