மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 124வது தரிசன விழா நேற்று நடைபெற்றது. 12 மணிக்கு சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசி பெற்றனர்.
அதனை தொடர்ந்து ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாராயண பூஜையும் செய்து மகாதீபாராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார். இந்நிகழ்வில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா ஸ்வாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர்.