கருங்கல், ஜூலை 29: கருங்கல் அருகே தொலையாவட்டம் காஞ்சிரங்காட்டு விளையை சேர்ந்தவர் ஞானசேகரன்(52).குடிநீர் வடிகால் வாரியத்தில் மோட்டார் இயக்குபவராக பணி புரிந்து வருகிறார். மேலும் தொலையாவட்டம் பகுதியில் உள்ள ஆலயத்தில் 6 வருடமாக விழாக்குழு தலைவராக இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலய திருவிழா மின்அலங்காரம் செய்வது தொடர்பாக ஞானசேகரன் பலருக்கு விண்ணபங்களை கொடுத்துள்ளார்.
அப்போது கொல்லன்விளாகத்தை சேர்ந்த மேத்யூ(38) என்பவருக்கு கொட்டேசன் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோத்தில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஞானசேகரனை பிடித்து வைக்க, மேத்யூ பைக் சாவியால் ஞானசேகரனின் தலையில் குத்தினார். இது குறித்து ஞானசேகரன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேத்யூவை கைது செய்தனர்.