வேலாயுதம்பாளையம், ஜூன் 30: கரூர் யுகி ஷிட்டோ-ரியூ கராத்தே அகாடமி சார்பில் கராத்தே மாணவர்களுக்கு
கருப்பு பட்டை , முதுநிலை கருப்புபட்டை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் வண்ணப்பட்டைகள்(கலர் பெல்ட் கிரேடிங்) வழங்கும் விழா புகழி திருமண மண்டபம் வேலாயுதம்பாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வண்ணப்பட்டைகளுக்குகான காரத்தே தேர்வில் கலந்து கொண்டனர். கருப்புபட்டை (வியாஷ், மோனிஸ்ராம், விமல்விஜித், ஹேமா, சாசினிகிருஷ்ணா மற்றும்(பிளாக்பெல்ட் டேன் கிரேடு) முதுநிலை கருப்பு பட்டை (அலாவுதீன்) ஆகியவற்றை மாணவர்கள் வென்றனர். தமிழ்நாடு ஸ்போர்ட்ஷ் கராத்தே சங்கத்தின் டெக்னிக்கல் டிரைக்டர் தாய் சென்சாய் ராஜசேகரன் மற்றும் கரூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் செயலாளர் , தலைமை பயிற்சியாளர் ரென்சி செந்தில்குமார் பயிற்சியாளர் கள் ரமேஷ், திருநா, இளஞ்செழியன் சீனியர் மாணவர்கள் காமராஜ், ரமேஷ், கோவிந்தராஜ், சரவணகண்ணன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.