கோவை, ஆக 1: கோவையில் வேலை செய்த போது கயிறு அறுந்து கீழே விழுந்த பெயிண்டர் பரிதாபமாக பலியானார். கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகை பாண்டியன் (45), பெயிண்டர். இவர் நீலிகோணாம்பாளையம் தட்சன் தோட்டத்தில் உள்ள ஒரு பிளாட்டில் நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தார். அங்குள்ள கட்டிடத்தில் கயிறு கட்டி அதில் தொங்கியவாறு பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து கார்த்திகை பாண்டியன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திகை பாண்டியன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.