கயத்தாறு, செப். 20: கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு சுப்பிரமணியபுரம் மற்றும் பாரதி நகரில் வாறுகால், பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக மாநில நிதி பகிர்வு திட்டத்தின் மூலம் ₹97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று நடந்த இதன் துவக்க பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, வார்டு கவுன்சிலர்கள் ஆதிலட்சுமி அந்தோணி, தேவி கண்ணன், புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் முருகையா, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக் மற்றும் ஊர் நாட்டாமை, பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கயத்தாறில் ₹97 லட்சத்தில் திட்டப்பணிகள் பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்
previous post