கயத்தாறு,பிப்.25: கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் 15வது மானிய நிதிக்குழு மூலம் ₹3 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, வார்டு செயலாளர் தங்கப்பாண்டியன், ஊர் நாட்டாமை அந்தோணிசாமி, வழக்கறிஞர் மாரியப்பன், வார்டு பிரதிநிதி ராஜ், முன்னாள் வார்டு கவுன்சிலர் சந்தனம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கயத்தாறில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா
0
previous post