கழுகுமலை, ஆக.29: கயத்தாறு மேற்கு ஒன்றியம் கழுகுமலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் வைத்து திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்
தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வைத்தார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜெய்சங்கர், சேசுபால்ராயன், வளர்மதி, ஒன்றிய பொருளாளர் சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மாரியப்பன், சண்முகபாண்டி சூசை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், கழுகுமலை பேரூராட்சி மன்ற தலைவர் அருணா சுப்பிரமணியன், பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார், பேரூர் துணைச் செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் முப்புடாதி கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.