தேவதானப்பட்டி, மார்ச் 21: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி லதா(54). இவரது மகன் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் அவருடைய பயன்பாட்டிற்காக கம்யூட்டர் மற்றும் லேப்டாப் வைத்துள்ளார். கடந்த 15ம் தேதி இரவு வழக்கம் போல் கம்யூட்டரை பயன்படுத்திவிட்டு தூங்கிவிட்டனர்.
பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது மொத்தம் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள கம்யூட்டர் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து லதா நேற்று தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.