கம்பம், ஜூன் 11: கம்பம் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு செக்கடி தெருவில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை தீவிரமாக நடந்து வருகிறது. கம்பம் நகராட்சிக்கு உட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. இதில் கம்பம் 14வது வார்டில் செக்கடி தெருவில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சேனை ஓடை பாலம் சேதமடைந்ததால் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த ஆறு மாதத்திற்கு முன் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியனால் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.
ஏறக்குறைய பாலப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அப்பகுதியில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததுடன் இன்னும் ஒரு சில நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சேனை ஓடை பாலம் திறக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.