கம்பம், மே 20: கம்பம் நாலந்தா இன்னோவேஷன் பள்ளி மாணவி அக்ஷிதா 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதனையொட்டி பள்ளி தாளாளர் முனைவர் விஸ்வநாதன் மாணவிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். மேலும் இரண்டு முதல் ஐந்தாம் இடத்தைப் பிடித்த மாணவ, மாணவிகள் கவியாழினி (484), பிரகதீஸ் (479), ஷர்வேஸ் (477) மற்றும் கனிஷ்கா (476) ஆகியோரையும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வில் மாணவ, மாணவிகளின் பெற்றோர், பள்ளி முதல்வர் மோகன், துணை முதல்வர் மலர்விழி மற்றும் 10ம் வகுப்பு ஆசிரியர்கள் நிர்மலா, ராதிகா, பிரவீனா மற்றும் சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டினர். மேலும், அறிவியல் பாடத்தில் 3 மாணவர்கள் 100க்கு100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ் பாடத்தில் அக்ஷயா என்ற மாணவி 100க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.
சமூக அறிவியல் பாடத்தில் 3 மாணவர்கள் 100க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது குறித்து பள்ளி தாளாளர் கூறும்போது, ‘‘தேர்வு எழுதிய 27 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதன் மூலம் நாலந்தா பள்ளி 100% தேர்ச்சியை கடந்த 18 ஆண்டுகளாக தக்க வைத்துள்ளது. தேர்வு எழுதிய 27 மாணவர்களில் 17 மாணவர்கள் 450 மதிப்பெண்ணுக்கு மேலும், 8 மாணவர்கள் 401 முதல் 450 மதிப்பெண்ணுக்குள்ளும், 2 மாணவர்கள் 381 முதல் 400 மதிப்பெண்ணுக்குள்ளும் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 27 மாணவர்களின் மொத்த சராசரி 451.11 என்ற இலக்கைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் நாலந்தாவில் மனப்பாடக் கல்விமுறை தவிர்க்கப்பட்டு, அனைவரையும் சாதனையாளர்களாக்குவதே எங்களின் தனிச்சிறப்பு. ஆகவே, பெற்றோர்கள் நாலந்தா பள்ளியை தங்களது குழந்தையின் கல்வி வளர்ச்சிக்கு நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என்றார்.