புதுக்கோட்டை, ஜூன் 30: புதுக்கோட்டையில் உலகத் திருக்குறள் பேரவையின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு, தலைவர் சத்தியராம் இராமுக்கண்ணு தலைமை வகித்தார். நிர்வாகிகள் புலவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், வருடத்திற்கு ஒருமுறை சிறைக் கைதிகளுக்குத் திருக்குறள் புத்தகம் வழங்கி திருக்குறள் கருத்துக்கள் பற்றிய சிந்தனையுரை, வருடம் ஒருமுறை ஏதாவது ஒரு கல்லூரியில் ஆண்டுவிழா நடத்துதல். பள்ளிமாணவ மாணவிகளுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்குதல் உள்ளிட்ட பல தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.