கமுதி, ஆக. 19: கமுதி அருகே பேரையூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் ஜேன் கிறிஸ்டி பாய், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கோட்டை ராஜ், சந்திரமோகன், மண்டல துணை வட்டாட்சியர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பேரையூர், புல்வாய்க்குளம், பாக்குவெட்டி, ஆனையூர், இலந்தைக்குளம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இவர்களிடமிருந்து 317 மனுக்கள் பெறறப்பட்டன. இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரூபிகேசவன், நாகரத்தினம், காவடி முருகன், முத்துராக்கு, பாக்கியலட்சுமி, பேரையூர் ஊராட்சி துணைத் தலைவர் அஜினாபானு, ஊராட்சி செயலர்கள், மின் வாரியம், குடிநீர், வேளாண்மைத் துறை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பேரையூர் ஊராட்சி செயலர் குருசாமி நன்றி கூறினார்.