எப்படிச் செய்வது?தேங்காய்த்துருவலை அரைத்து கொள்ளவும். கொடம் புளியை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிது உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து வேகவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, சோம்பு தாளித்து, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இஞ்சி, பூண்டு, மசாலா வகைகளை சேர்த்து வதக்கி, கொடம் புளியை போட்டு வதக்கவும். மசாலா வாசனை போனதும் வெந்த கிழங்கை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.
கப்பக்கறி
123
previous post