கும்பகோணம், பிப்.15: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் மாநில அளவிலான பாரம்பரிய நெல் விளைச்சலுக்கான போட்டி நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் மாநில அளவிலான பாரம்பரிய நெல் பயிர் ரகத்துக்கான பயிர் விளைச்சல் போட்டிக்கான அறுவடை பணி பொன்பேத்தி கிராமத்தில் விவசாயி தேவேந்திரன் சாகுபடி செய்திருந்த ஆத்தூர் கிச்சடி சம்பா ரகத்தில் அறுவடை பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் அறுவடை மகசூல் கணக்கெடுப்பு பணியினை தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குநர் ஐயம் பெருமாள், திருவாரூர் வேளாண்மை துணை இயக்குநர் விஜயலட்சுமி, விவசாய பிரதிநிதியாக முன்னோடி விவசாயி ராம தியாகராஜன், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக், துணை வேளாண்மை அலுவலர் எபிநேசன் ஆகியோர் பங்கேற்று மகசூல் விபரங்களை கணக்கிட்டனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் சீனிவாசன், பிரியா மற்றும் திரிபுர சுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.