கும்பகோணம்: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்த நிலையில், மதுபாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்த கபிஸ்தலம் பாலக்கரை நடராஜன் மகன் திவான் பாபு (30), நரசிம்மபுரம் தங்கையன் மனைவி செல்வி (55), காமராஜர் காலனி ராஜலிங்கம் மகன் ரமேஷ் (49), அக்கரைப்பூண்டி கந்தசாமி மகன் ஜெய்கணேஷ் (44), மணலூர் அமிர்தலிங்கம் மகன் சூசைராஜ் (45) ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.