நிலக்கோட்டை, ஆக. 27: நிலக்கோட்டையில் 1977ம் ஆண்டு அரசு பள்ளி முன்னாள் மாணவ நண்பர்கள் சார்பில் சுதந்திரதின விழாவையொட்டி மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சை, நாகர்கோவில், மூணாறு, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நகரங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் திண்டுக்கல் ஜிடிஏ கல்லூரி அணி வெற்றி பெற்றது.
இந்த அணிக்கு ரூ.15,000 ரொக்கப்பரிசு மற்றும் நினைவு கோப்பையை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த ஆவாரம்பட்டி அணிக்கு ரூ.12,000 ரொக்கப்பரிசு, நினைவு கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த திண்டுக்கல் சவேரியார்பாளையம் அணிக்கு ரூ.10,000 ரொக்கப்பரிசு, நினைவு கோப்பையும், நான்காம் இடம் பிடித்த மதுரை மாவட்டம் கச்சைகட்டி அணிக்கு ரூ.7,000 ரொக்கப்பரிசு, நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது.