கமுதி, ஜூன் 2: கமுதி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 2ம் ஆண்டு கபடி போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் 40 அணிகள் பங்கேற்றதில் சேர்ந்தகோட்டை அணி முதல்பரிசை பெற்றது. இந்த அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த மேட்டுப்பட்டி நீதி வென்றான் செவன்ஸ்\”ஏ\” அணிக்கு ரூ.10 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த மேட்டுப்பட்டி நீதிமன்றம் செவன்ஸ் \”பி\” அணிக்கு ரூ.8 ஆயிரம், நான்காம் இடம் பிடித்த பாம்பூர் அணிக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் 5ம் இடம் பிடித்த தோப்படைபட்டி அணி, ஆறாம் இடம் பிடித்த கொண்டுலாவி அணி, 7ம் இடம் பிடித்த புத்தேந்தல் அணி, 8ம் இடம் பிடித்த கருங்குளம் அணி ஆகிய அணிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டன.