கன்னியாகுமரி,நவ.21: கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. வானம் கருமேகம் திரண்டு காட்சியளித்ததால் சூரியன் உதயமான காட்சி தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை. காலை 9 மணிக்கு மழை ஓய்ந்த நிலையில் 1 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
கன்னியாகுமரியில் படகு சேவை தாமதம்
0