கன்னியாகுமரி, நவ. 22: கன்னியாகுமரியில் தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தினம் தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பாசி, ஊசி வைத்து விற்பனை செய்து வந்தனர். எல்லா சீசனிலும் இவர்கள் கன்னியாகுமரியில் வியாபாரம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் நிகழ்ச்சிக்காக வந்திருந்த அதிகாரிகளை பாசி, ஊசி விற்பவர்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி எஸ்ஐ சுந்தரமூர்த்தி சம்பவ இடம் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கன்னியாகுமரியில் கடைகளை அகற்றியதால் அரசு விருந்தினர் மாளிகை முற்றுகை
0