பள்ளிபாளையம்,மார்ச் 8: பள்ளிபாளையம் காவிரி கரை ஓம்காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம், அம்மன் அபிஷேகம், அலங்காரம், அன்னதானம், பொங்கல் வைத்தல், சக்தி அழைத்தல், மாவிளக்கு, பட்டிமன்றம், சிலம்பாட்டம், புலியாட்டம், அம்மன் திருவீதி உலா, வண்டிவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று கன்னிமார் சுவாமி தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், சிறுமிகள் 7 பேர் கன்னிமார் சுவாமிகளாக தேர்வு செய்யப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்களுடன் சிறுமிகளை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கன்னிமார் தீர்த்தக்குட ஊர்வலம்
0
previous post