சென்னை: புனேவிலிருந்து புதிய 36 பல்சர் பைக்குகளை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று ஆவடி ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு அருகே உள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வாகனத்தை சதாம் உசேன் (36) ஓட்டி வந்தார். வாகனத்திலிருந்த 36 பல்சர் வண்டிகளையும் டீலருக்கு டெலிவரி செய்ய நேற்று மதியம் 2.30 மணிக்கு ஓட்டுனர் சதாம் உசேன் முயற்சி செய்துள்ளார். அப்போது, வண்டியின் மேல் சென்ற மின்சார கம்பி ஒன்று கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக உரசியது. இதில், உடனடியாக லாரியில் தீப்பற்றி எரியவே அதில் இருந்த 36 புதிய பல்சர் வாகனமும் தீ பிடித்து எரிந்தது. இதில் மின் கம்பி அறுந்தும் விழுந்தது. இருப்பினும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து ஆவடி தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். ஒரு மணி நேரம் தாமதமாக வந்து தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், வாகனத்தின் உள்ளே இருந்த 36 புதிய பல்சர் வாகனங்களும் எரிந்து நாசமானது….