பந்தலூர்,ஆக.27: பந்தலூர் பகுதியில் தொடரும் கனமழைக்கு அத்திமாநகர் பகுதியில் வீடு இடிந்து சேதமடைந்தது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேகமூட்டத்துடன் கூடிய தொடர் மழை நீடிப்பதால் பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 11வது வார்டு அத்தி மாநகர் பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சரவணகுமாரி என்பவரது வீடு ஒரு பக்கம் சுவர் இடிந்து சேதமடைந்தது.
சம்பவ இடத்திற்கு அப்பகுதி கவுன்சிலர் ஆலன் சென்று சேதம் குறித்து ஆய்வு செய்தார் தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு அரசு மூலம் நிவாரணம் கிடைக்க வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தார். தொடர் மழை காரணமாக இப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.