கந்தர்வகோட்டை, ஜூன் 23: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் விவசாயிகள் நெல், சோளம், எள்ளு, கரும்பு, கிழங்கு, மற்றும் சிறுதானியங்கள் பயிர் பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் பொதிய மழை இல்லாததால் ஆழ்துளை கிணற்றில் மூலம் நீர்பாய்ச்சி வந்தனர். இந்த நிலையில் 22ம் தேதி மாலை வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு திடீர் என இடியுடன் கூடிய மழை பெய்தது இதனை சற்றும் எதிர்பார்க்காத வியபாரிகள் கடைக்கு முன்வைத்து இருந்த பொருள்கள் நனைந்தன. இதனால் சில பொருட்கள் மழையில் நனைந்து வீனாகியதும் மட்டும் அல்லாது பொருட்களை எடுத்து வைபதில் வியாபாரிகள் சிறு பதட்டம் அடைந்தனர்.
மழையை கண்டு விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது இப்பகுதியில் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் குளங்கள் வறண்ட நிலையில் உள்ளது எனவும் இந்த மழையின் மூலம் ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது, மேலும் மழையால் பயிர்களுக்கு நல்லது எனவும் கூறுகிறார்கள். இந்த மழையினால் கரும்புக்குகளை வெட்டுவது சுலபம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.