கந்தர்வகோட்டை, ஆக 6: கந்தர்வகோட்டை பகுதியில் உளுந்து பயிருக்கு மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயிகள் தற்சமயம் கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, சோளம், உளுந்து சாகுபடி செய்து வருகிறனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியில் மும்முனை மின்சாரம் தடையில்லாமால் கிடைப்பதால் ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகிறனர்.
இந்த நிலையில் உளுந்து செடி காய்க்கும் தன்மையில் உள்ளது. அதனை பூச்சித் தாக்குதலில் இருந்து காக்க தண்ணீர் மருந்தினை பயிருக்கு பவர் ஸ்பிரேயர் மூலம் தெளிந்து வருகிறனர். விவசாயிகள் கூறும்போது, தமிழக அரசு நெல்களை நேரடி கொள்முதல் செய்வதுபோல் உளுந்து பயிரையும் கொள்முதல் செய்து மக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும் என்றனர்.