கந்தர்வகோட்டை,ஆக.19: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் ஆடி மாதம் முதல் அனைத்து கோயில்களிலும் விழாக்களும், கிடா வெட்டுக்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அதிக அளவில் தேங்காய் பொதுமக்களுக்கும், பத்தர்களுக்கு தேவை இருந்தது. தற்சமயம் ஆவணி திருவிழா தொடங்கி உள்ளதால் போதிய தேங்காய் வரத்து குறைந்துள்ளது. ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகி வந்த தேங்காய் தற்சமயம் 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. விவசாயிகளும், வியாபாரிகளும் கூறும்போது, கஜா புயலுக்கு பிறகு சற்று தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தேங்காய் வரத்து குறைந்துள்ளது. தினசரி கந்தர்வகோட்டை ஏல கடைகளுக்கு ஆயிரக்கணக்கில் ஏலத்திற்கு வந்த தேங்காய் தற்சமயம் மிகவும் குறைந்துள்ளது என்றனர்.